Guruji Gururaja Academy Classes
Guruji Gururaja Software
Guruji Gururaja Spiritualty Trust
திருஅண்ணாமலையார் ஜோதிட ஆலயம்
இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம் !!
சேலம் மாவட்டம் நரசோதிபட்டி, செங்கல்பேட்டையை பூர்வீகமாக கொண்டு பிறந்து வளர்ந்து வந்தேன்.
இளம் வயதில் மூடநம்பிக்கையின் காரணமாக ஆன்மீகத்தில் நாட்டம் இல்லாமல் இருந்த வேளையில் நாடி ஜோதிடர் பாலாஜி என்கிற ஜோதிடருக்கு ஒரு சில உதவி செய்ததன். அதன் அடிப்படையில் அவர் உங்கள் ஜாதகத்தை கொடுங்கள் நான் உங்களுக்கு பார்த்து சொல்கிறேன் என்று சொன்னார்.
எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று சொல்லவே ஒருமுறை கொடுத்துப் பாருங்கள் உங்களுக்கு ஏதாவது என்னால் முடிந்த உதவிகளை செய்ய நினைக்கிறேன் என்று கூறினார். நானும் எனது வீட்டில் உள்ள ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜாதகம் பார்க்க கொடுத்தேன். அவருக்கு என்னைப் பற்றி பெரிதாக எந்த தகவலும் தெரியாது. அவர் என்னுடைய ஜாதகத்தை பார்த்து நான் வியந்து போகும் அளவிற்கு எண்ணற்ற விஷயங்களை கூறினார். என்னுடைய கடந்த கால வாழ்க்கையை கூறும்போது நானே பிரம்மித்து விட்டேன்.
எதிர்கால பலன்கள் கூறும்போது முழுவதுமாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் சொன்ன பலன்கள் அதுபோன்று இருந்தது. நீங்கள் மிகப்பெரிய ஜோதிடர் ஆகுவீர்கள். குரு ஸ்தானமும் உண்டாகும். உங்களுடன் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டுமல்லாமல் உங்கள் கையால் நீங்கள் ஆலயம் எழுப்புவீர்கள். உங்கள் கையால் நிறைய ஆலயங்களுக்கு சிலைகள் பிரதிஷ்டை செய்வீர்கள். உங்கள் எழுத்துக்களாலும் பேச்சாலும் எண்ணற்ற மக்களின் வாழ்க்கை நிலையை நல்ல நிலைக்கு திசை திருப்புவீர்கள். உங்களுக்கு முதலில் ஆண் குழந்தை, இரண்டாவது பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் கார் ஒன்றை வாங்குபவர்கள் என்று கூறினார். அடுத்து வீடு கட்டுவீர்கள் என்று கூறினார்.
அதே சமயம் ஒரு சில காலகட்டத்தில் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கும் நிலைமை வரும் அதற்கு பிறகு தான் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையில் உருவாகும் என்று கூறினார். கடந்த கால வாழ்க்கைக்கு பிற்கால வாழ்க்கைக்கும் நீங்கள் புது பிறவி எடுத்தது போன்று உங்களுடைய எண்ணற்ற குணாதிசயங்களும் மாறும் என்று கூறினார். எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது அதே சமயம் சிரிப்பும் வந்துவிட்டது.
தெய்வீகம், ஆன்மீகம் ஜோதிடம் எதிலும் ஆர்வம் இல்லாத நான் எப்படி இத்தனை செயல்களில் ஈடுபடுவேன் என்ற கேள்வியை கேட்டேன். நான் சொன்னது அத்தனையும் பலிக்கும் காலம் போகப் போக தெரிந்து கொள்வீர்கள் என்று மட்டும் சொன்னார். எனக்கு அன்றைய தினம் புரியாத புதிராக இருந்தது. இதுபோல நிறைய பலன்களைச் சொன்னார்.
அவர் கூறியது போலவே முதலில் ஆண்குழந்தை பிறந்தது. பிறகு ஒரு வெள்ளை கலர் கார் வாங்கினேன். இரண்டு வருடங்கள் ஓடியது அப்போதுதான் அந்த ஜோதிடர் சொன்னதை நினைத்து பார்த்தேன். அன்று இருந்த சூழ்நிலையில் நான் கார் வாங்குவேன் என்று நினைத்துக் கொண்டு பார்க்கவில்லை. ஆனால் கார் வாங்கினேன். இதையெல்லாம் வைத்து அவர் சொன்னதெல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று குழப்பமும் இருந்தது.
சரி இருக்கட்டும் அடுத்து எனக்கு பெண் குழந்தை பிறந்தால் ஜோதிடத்தை ஏற்றுக்கொள்வோம் என்று இருந்தேன். ஆச்சரியம் அவர் சொன்னது போலவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. இறைவன், ஆன்மீகம், ஜோதிடம் அனைத்தும் மூடநம்பிக்கை அல்ல அதில் ஏதோ ஒன்று இருக்கிறது என்று முடிவு செய்தேன்.
அந்த ஜோதிடர் சொன்னது போலவே வாழ்க்கையில் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது சரி தற்போது அவரை போய் சந்திக்கலாம் என்று அந்த அலுவலகத்தில் சென்றேன் அவர் இல்லை. பிறகு அவரை வெவ்வேறு வடிவத்தில், வெவ்வேறு நபர்களை வைத்து அவரை சந்திக்க நினைத்தேன் ஆனால் அவர் இறந்து விட்டதாக தகவல் வந்தது. மனம் உடைந்து நின்றேன், வருத்தப்பட்டேன்.
அந்த ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு இக்கட்டான சூழல் வரும் என்று சொன்னார் மிகவும் கவனமாக இருங்கள் என்று சொல்லியிருந்தார். அவர் சொன்னது போலவே அந்த இக்கட்டான காலம் வந்தது. அந்த காலகட்டத்தில் நாடி ஜோதிடர் பாலாஜி ஜோதிடரும் உயிரோடு இல்லை.
இப்போ நான் என்ன செய்வது, இதற்கு விமோச்சனத்தை எங்கு தேடுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன். அவர் சொன்னது போலவே கோவில் கோவிலாக சுற்றினேன். ஏதாவது ஒரு தெய்வம் நம்மளை காப்பாற்றதா என்ற ஏக்கத்தில் சிவனடியார்களோடு சேர்ந்து பல கோயில்களை வழிபாடு செய்தேன்.
இருந்தும் உடனடியாக எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. பிறகு எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு நிறைய ஜோதிடர்களை பார்த்தேன். ஒருவரும் அந்த ஜோதிடர் சொன்னது போல் எனக்கு பலன்களைச் சரியாக சொல்லவில்லை. சில ஜோதிடர்கள் சொன்ன பலன்களை கேட்டு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணமே எனக்கு வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அதற்கான முயற்சியும் செய்தேன்.
பின்பு இது தவறான முடிவு என முடிவெடுத்து மீண்டும் நிறைய கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தேன். அப்போதுதான் இறைவன் கனவில் வந்தார் சில விஷயங்கள் புலப்பட்டது. சில அதிசயங்கள் எனது வாழ்வில் நிகழத் தொடங்கியது.
இந்த வேலையில் எப்படியாவது ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு அதிகமாக இருந்தது. ஏனெனில் நான் அறிந்த வரையில் ஜோதிடம் உண்மை, ஜோதிடம் சொல்பவர்களுக்கு பலாபலன்கள் மாறுபடுகிறது என்பதை உணர்ந்தேன். அதன் அடிப்படையில் ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன். நிறைய பணம் செலவழித்து பெரிய பெரிய குருமார்களிடம் படித்தேன்.
சில ஜோதிடர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு ஜோதிட அனுபவ கருத்துக்களை சொல்லித் தாருங்கள் என்று கற்றுக் கொண்டேன். அதன் அடிப்படையில் ஒரு கட்டத்தில் ஜோதிடர் ஆனேன். ஜோதிடம் கற்று முடிந்த பிறகு தான் ஒரு விஷயம் தெரிய வந்தது.
இங்கு ஜோதிட பாடத்திட்டங்கள் முழுமையாக பாடபுத்தகத்தில் இல்லாமல் இருந்தது. இதனால்தான் நிறைய ஜோதிடர்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். சுமார் 20000 ஜாதகங்களுக்கு மேல் பார்த்து அவை அனைத்தையும் ஆய்வுக்கு எடுத்து ஆய்வு செய்து வந்தேன்.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் எனது ஜாதகத்தில் ஜோதிட ஆசிரியர் ஆகும் காலம் வந்தது. அதன் அடிப்படையில் ஜோதிட ஆய்வுகளை ஒன்று சேர்த்து ஒரு பாடத்திட்டத்தை உருவாக்கி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம் என்று முடிவு எடுத்தேன். இறைவன் கொடுத்த உத்தரவின் அடிப்படையில் இலவச வகுப்பு ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
2021 ஆம் வருடம் கார்த்திகை பௌர்ணமி தினத்தில் அதாவது கார்த்திகை தீபம் தினத்தில் குருஜி குருராஜா ஆன்மிக அறக்கட்டளை ஆரம்பித்து அதில் இலவச ஜோதிட வகுப்புகளை நடத்தலாம் என்று முடிவு செய்தேன். 12-12- 2021 முதல் பேட்ச் வகுப்பு ஆரம்பமானது. திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை வகுப்பு நடைபெற்றது.
முதல் பேட்ச் சுமார் 120 வகுப்புகள் இலவசமாக அதில் அடிப்படை, உயர்நிலை, முதுநிலை பாடத்திட்டங்கள் நடத்தினேன். இதுபோன்று அடுத்தடுத்து பல பேட்ஜ்கள் பாடம் நடத்தி 1500 மாணவர்களுக்கு மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.
இதில் சோழி பிரசன்னம், ஜாமக்கோள் பிரசன்னம், நியூமராலஜி, டாரட் பிரசன்னம், கடிகார பிரசன்னம், மலர் மருத்துவம், வாஸ்து, ஜோதிட பரிகாரம், தாந்திரீகம் போன்ற வகுப்புகள் கட்டண வகுப்பாகவும் எடுக்கப்பட்டது. படித்த மாணவர்களுக்கு ஜோதிட மாநாடு நடத்தி அதில் சான்றிதழும் வழங்கப்பட்டது.
31- 7 - 2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் மாநாடு நடத்தி ஜோதிட நூல் ஒன்றை வெளியிட்டு, ஜோதிட கருத்துக்களை வழங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினோம். 26-2-2023 ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது மாநாடு நடத்தி இரண்டாவது ஜோதிட நூல் வெளியிட்டும், நமது வெப்சைட் வெளியீட்டும், ஜோதிட கருத்துகள் வழங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினோம். 27- 8- 2023 மூன்றாவது மாநாடு நடத்தி, ஜோதிட கருத்துக்களை வழங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினோம். 24-12-2023 நான்காவது மாநாடு நடத்தி ஜோதிட கருத்துக்களை வழங்கி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினோம். 9-2-2025 ஐந்தாவது மாநாடு நடத்தி டாரட் புத்தகத்தை வெளியிட்டு, ஜோதிட கருத்துக்களை வழங்கி, மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம்.
இது மட்டும் இல்லாமல் ஏழை எளியவர்களுக்கு பொருள் உதவிகள் தந்து உதவி செய்தோம். சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி தோறும் இரவு 7 மணி அளவில் அன்னதானம் வழங்குகின்றோம். இப்படி எண்ணற்ற சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறோம்..
Sri Annamalaiyar Astrology Institute
Warm welcome to our website!!
I was born and raised in Narasothipatti, Chengalpettai, Salem District. In my younger days, because of superstition, I had no interest in spirituality. During that period, I met Nadi Astrologer Balaji. He saw my horoscope and told me countless things that amazed me.
Just as he said, first a son was born. Later I bought a white car. Afterwards, a daughter was also born. Since all these came true, my belief in astrology increased.
In my younger days, because of superstition, I had no interest in spirituality. Once I gave some help to an astrologer named Balaji. Based on that, he said, “Give me your horoscope, I will read it for you.” I said, “I do not agree with this,” but he replied, “Just give it once, if possible I will try to do some help for you.” So I took the horoscope from my house and gave it to him. He did not know much information about me. He saw my horoscope and told me countless things that made me wonder. When he described my past life, I was astonished. But when he told future predictions, I could not fully accept them.
Because the predictions he told were like this: “You will become a great astrologer. You will have Guru’s position. There will be a crowd with you. A temple will be built by your hand. You will consecrate idols in temples. Through your writings and speech, people’s lives will change for the better. First you will have a son, then a daughter. Within a certain time, you will buy a car. Later you will build a house. But at one point, a difficult situation will come.”
I laughed and asked, “How can I ever get involved in spirituality and astrology?” He replied, “As time passes, you will come to know.” Truly, just as he said, it happened. First a son was born, then I bought a car, then a daughter was born. My belief in astrology increased.
But just as he said, the difficult time came. At that time, he was no longer alive. With a broken heart, I went to many temples and worshipped. Since no immediate change happened, I met many astrologers. The predictions I received from them caused mental distress and even led me to attempt suicide. Later I realized it was wrong and completely turned to God.
By God’s grace, some miracles began to happen. My interest in learning astrology grew stronger. I went to great gurus and studied, also learned privately. I researched about 20,000+ horoscopes. Based on that, at one point I became an astrologer.
In 2021, on the day of Karthigai Pournami, I started Guruji Gururaja Spiritual Foundation, and began conducting free astrology classes. The first batch had 120 classes, and later many batches followed, from which 1500+ students benefited.
Later, classes like Sozhi Prasannam, Jamakkol, Numerology, Tarot, Vastu, Remedies were also conducted. Astrology conferences were organized, books were published, and certificates were given.
From 31-07-2022 to 09-02-2025, five conferences were conducted. In each conference, astrology seminars, book releases, and certificate distributions took place.
Additionally, social services such as helping the poor and needy, and Annadhanam every Pournami at Salem Kottai Mariamman Temple are also being done.
Thus, we continue to do countless services.